மன்னார்குடியில் மூதாட்டியின் கழுத்தில் வெட்டி செயின் பறிப்பு சத்துணவு சமையலர், கள்ளக்காதலன் கைது-வட்டிப்பணத்தை கட்டுவதற்கு திருடியது அம்பலம்

மன்னார்குடி : திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்த உள்ளிக்கோட்டை கிராமத்தை சேர் ந்த அரசுப்பள்ளி ஆசிரியரான சர்வானந்தம் என்பவரின் இரண்டாவது மனைவி மாரியம்மாள் (65). கணவர் இறந்த நிலையில் இவர் தனது மகளு டன் வசித்து வந்தார். மகளும் திருமணமாகி வெளியூர் சென்றதால் மன்னார் குடி கீழ முதல் தெருவில் உள்ள ஒரு காலனி வீட்டில் மாரியம்மாள் தனி யாக வசித்து வந்தார்.இந்நிலையில், கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு கையில் அரிவாளோடு இரவு நேரத்தில் மாரியம்மாள் வீட்டிற்குள் நுழைந்த மர்மநபர் அவரின் தலை மற்றும் கழுத்து பகுதியில் சரமாரி வெட்டி விட்டு அவர் அணிந்திருந்த மூன்றரை பவுன் தங்க செயினை பறித்து கொண்டு தப்பி யோடி விட்டார்.

ரத்த வெள்ளத்தில் கீழே கிடந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு மன்னார்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவ மனையில் சேர்த்தனர்.இது குறித்து தகவல் அறிந்து திருவாரூர் மாவட்ட எஸ்பி விஜயகுமார், டிஎஸ் பி பாலச்சந்திரன், இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன் ஆகியோர் சம்பவ இடத்தி ற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இதில் சம்பந்த பட்ட நபர்களை உடனடியாக கைது செய்ய போலீசாருக்கு எஸ்பி விஜய குமார் உத்தரவிட்டார்.

இதையடுத்து, டவுன் எஸ்ஐ முருகன், குற்றப்பிரிவு எஸ்ஐ முருகானந்தம் உள்ளிட்ட போலீசார் சம்பவம் நடத்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து விசாரணையை தீவிர படுத்தினர்.இந்நிலையில், இது தொடர்பாக வந்த ரகசிய தகவலின் பேரில் மாரியம்மாள் வீட்டிற்கு பக்கத்து வீட்டில் வசிக்கும் ராணி (36) மற்றும் மன்னார்குடி மீனா ட்சி அம்மன் கோயில் தெருவை சேர்ந்த கார்த்திக் (30) ஆகிய இருவரையும் மன்னார்குடி போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடம் டிஎஸ்பி பாலச்சந்திரன், பயிற்சி டிஎஸ்பி இமயவரம்பன், இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன் ஆகியோர் தீவிர விசாரணை நடத்தினர். இருவரும் குற்றத்தை ஒப்புக்கொண்டனர். பின்னர் கார்த்திக் கொடுத்த தகவின் பேரில் மூன்றரை பவுன் தங்க செயினும், தாக்குதலுக்கு பயன்படுத்திய அரிவாள் ஒன்றையும் போலீசார் கைப்பற்றினர்.

‘இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், கைது செய்யப்பட்ட ராணி மன்னார்குடியில் உள்ள சத்துணவு மையத்தில் சமையல் வேலை பார்த்து வந்தார். இவரின் கணவர் இறந்து விட்டார். இவர் மன்னார்குடி கீழ 2ம் தெரு வை சேர்ந்த விக்னேஷ் என்பவரிடம் ரூ 25 ஆயிரம் வட்டிக்கு பணம் வாங்கி உள்ளார். பணத்தை திருப்பி கேட்டு விக்னேஷ் நெருக்கடி கொடுத்துள்ளார். இந்த பிரச் சனையை தனது கள்ள காதலனும், விக்னேஷின் நண்பனுமான மீனாட்சி அம் மன் கோயில் தெருவை சேர்ந்த கார்த்திக்கிடம் ராணி கூறி உள்ளார். அப்போது, ராணி தனது பக்கத்தில் வீட்டில் மாரியம்மாள் என்ற மூதாட்டி தனியாக வசிப்பதாகவும், அவரிடம் நகைகளை பறித்து விற்றால் அதில் கிடைக்கும் பணத்தை சரிபாதியாக பிரித்து கொள்ளலாம் என கார்த்திக்கிடம் கூறி உள்ளார்.

இந்நிலையில் கடந்த 22ம் தேதி இரவு மாரியம்மாள் வீட்டில் தனியாக டிவி பார்த்து கொண்டிருந்ததை பார்த்த ராணி கார்த்திக்கு தகவல் கொடுத்து வரவழைத்தார். அதன் பேரில் அங்கு வந்த அவர் மூதாட்டி மாரியம்மாளை சரமாரி வெட்டி விட்டு அவர் அணிந்திருந்த மூன்றரை பவுன்செயினை அறுத்து கொண்டு தனது மற்றொரு கள்ள காதலியான பிரிய ங்கா என்பவரிடம் செயினை கொடுத்து விட்டு கார்த்திக் தப்பியோடி விட் டார்.

பின்னர், நடந்த சம்பவம் குறித்து தனது நண்பரான விக்னேஷிடம் குடிபோதையில் கார்த்திக் உளறியுள்ளார். அதனை விக்னேஷ் போலீசாரிடம் கூறி உள்ளார். அதன் பேரில் ராணியையும், அவரது கள்ள காதலருமான கார்த்திக்கும் கைது செய்யப் பட்டதாக கூறினர். இந்நிலையில், சம்பவம் நடந்த 24 மணி நேரத்திற்குள் தீவிர விசாரணையில் ஈடுபட்டு குற்றத்தில் ஈடுபட்ட குற்றவா ளிகளை கைது செய்த போலீ சாரை எஸ்பி விஜயகுமார் பாராட்டினார்.

Related Stories:

More
>