ஊட்டியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

ஊட்டி :  ஊட்டியில் உள்ள சுற்றுலா தளங்களில் நேற்று சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.நீலகிரி மாவட்டம் ஊட்டியில் கொரோனா ஊரடங்கிற்கு பின் கடந்த ஆகஸ்ட் மாதம் 23ம் தேதி முதல் சுற்றுலா தலங்கள் அனைத்தும் திறக்கப்பட்டு சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

தற்போது இரண்டாவது சீசன் கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில் வெளியூர்களில் இருந்தும் அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகாவில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகை புரிகின்றனர். குறிப்பாக புதுமண தம்பதிகளை அதிகம் காண முடிகிறது. அவ்வாறு வர கூடியவர்கள் தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா போன்ற பூங்காக்களும், ஊட்டி படகு இல்லத்திற்கும் சென்று வருகின்றனர்.

வார நாட்களில் சுற்றுலா பயணிகள் வருகை குறைவாக உள்ள நிலையில், வார இறுதி நாட்களான சனி, ஞாயிற்றுகிழமைகளில் சுற்றுலா பயணிகள் வருகை பன்மடங்கு அதிகரிக்கிறது.

இந்நிலையில் ஞாயிற்றுகிழமை விடுமுறை தினமான நேற்று ஊட்டியில் உள்ள சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் காணப்பட்டது.

Related Stories:

More
>