கள்ளக்காதலியை கனடா வாலிபருக்கு மணம் முடித்து வைத்த பேராசிரியர்-காரில் கடத்தி திருமண செலவை கேட்டு தாக்குதல்: 3 பேர் கைது

திருச்சி : திருச்சி மாவட்டம் துறையூரை சேர்ந்தவர் விமல்ஆதித்தன்(46). இவர் தனியார் கல்லூரியில் பேராசிரியராக உள்ளார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் மகன், மகள் உள்ளனர். விமல் பணியில் உள்ள அதே கல்லூரியில் வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் நதியா(34) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரும் அதே கல்லூரியில் பேராசிரியையாக பணியில் இருந்தார். நதியாவிற்கு திருமணம் ஆகவில்லை.

ஒரே கல்லூரி என்பதால் இருவரும் நெருங்கி பழகினர். இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதையடுத்து நதியாவை உறையூரில் ஒரு வீடு வாடகைக்கு எடுத்து தங்க வைத்து உல்லாசமாக இருந்து வந்தனர். இந்நிலையில் நதியாவிற்கு வேறு ஒரு கல்லூரியில் பணி கிடைத்து மாற்றலாகி சென்றாலும் இருவரின் தொடர்பு நீடித்து வந்தது. அடிக்கடி இருவரும் செல்போனில் வீடியோ காலில் நிர்வாணமாக பேசி மகிழ்ந்துள்ளனர்.

இதற்கிடையில், துறையூரை சேர்ந்தவர் சசிகுமார்(35). இவர் கனடா நாட்டின் குடியுரிமை பெற்று அங்கு ஓட்டல் வைத்து நடத்தி வருகிறார். உறவினரான சசிகுமாரிடம் தனக்கு தெரிந்த பெண் ஒருவர் இருப்பதாகவும், அவர் கல்லூரி ஒன்றில் பேராசிரியையாக பணியில் இருப்பதாகவும் கூறி நதியாவை திருமணம் செய்துகொள்ள கூறினார். இதனை நம்பிய சசிகுமார், திருமணத்திற்காக கடந்த ஜூலை மாதம் இந்தியா வந்தார். திருமணத்திற்கான பெண் பார்க்கும் படலம் முடிந்து, ஆகஸ்ட் 20ம் தேதி சசிகுமாருக்கும் நதியாவிற்கும் இடையே வெகு விமரிசையாக திருமணம் நடந்தது.

இதையடுத்து கணவன், மனைவி இருவரும் துறையூரில் குடித்தனம் நடத்தினர். திருமணம் முடிந்து 2 மாதம் ஆன நிலையில், சில நாட்களுக்கு முன் மனைவி நதியாவின் செல்போனை வாங்கி பார்த்த சசிகுமார் அதிர்ச்சி அடைந்தார். அதில், நதியா நிர்வாணமாக குளிப்பதை விமல்ஆதித்தன் பார்ப்பது போல் உள்ள படம் மற்றும் வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து மனைவி நதியாவிடம் கேட்டபோது, தனக்கும் விமல் ஆதித்தனுக்கிடையே கடந்த 2 ஆண்டாக தொடர்பு இருப்பதும், அதனை மறைத்து திருமணத்தை நடத்தி வைத்து மீண்டும் தொடர்பில் இருந்ததை கூறினார். இதனால் அதிர்ச்சியில் உறைந்த சசிகுமார், மனைவி நதியாவை தாய் வீடான வேலூரில் விட்டுவிட்டு, திருச்சி வந்தார்.

அதை தொடர்ந்து துறையூரை சேர்ந்த நண்பர் பிரசாத்துடன் திருச்சி வந்த சசிகுமார், பேராசிரியர் விமல் ஆதித்தனை பழிவாங்க துடித்தார். இதையடுத்து திருச்சி பெரிய மிளகுபாறையை சேர்ந்த லாசர்ஆரோக்கியராஜ்(32) என்பவருடன் இணைந்து கடந்த 17ம் தேதி காரில் பேராசிரியர் விமலை கடத்தி சென்றார். காரில் சுற்றிக்கொண்டு தனக்கு ஏன் அந்த பெண்ணை திருமணம் செய்து வைத்தாய் என கேட்டு தாக்கினார். மேலும் ரூ.10 லட்சம் திருமன செலவு தொகையை தரக்கோரி தாக்கினர். தொடர்ந்து ஜி.பே மூலம் ரூ.2 லட்சத்தை சசிகுமாருக்கு விமல் வழங்கினார். இதற்கிடையில் கணவரை காணாதது குறித்து விமலின் மனைவி போலீசில் புகார் அளித்தார்.

தொடர்ந்து அன்றைய தினம் இரவு சசிகுமார் மற்றும் நண்பர்கள் மத்திய பஸ் நிலையத்தில் விமலை இறக்கிவிட்டு சென்றனர். பின்னர் வீட்டுக்கு சென்ற விமலிடம், எங்கே போய் இருந்தீர்கள் என மனைவி கேட்க, வெளியூர் சென்றதாக கூறி சமாளித்தார். தொடர்ந்து நேற்று முன்தினம் மீண்டும் காரில் வந்த சசிகுமார், நண்பர்கள் பேராசிரியர் விமலை காரில் ஏற்றிக்கொண்டு மீதம் பணம் எங்கே என கேட்டு தாக்கினர்.

இச்சம்பவம் குறித்து ஆன்லைன் மூலம் விமல் புகார் அளித்தார். மேலும், சசிகுமார், அவரது நண்பர்களிடம் போலீசில் புகார் அளித்துவிட்டதாக விமல் கூறியதையடுத்து அவரை இறக்கி விட்டு மாயமாகினர். இந்நிலையில் நேற்று காவல் நிலையம் சென்ற விமல், நடந்த சம்பவங்களை கூறி புகார் அளித்தார். இது குறித்து வழக்குப்பதிந்த செசன்ஸ் கோர்ட் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் (பொ) கோசலைராமன், எஸ்ஐ மோகன் ஆகியோர் சசிகுமார், நண்பர்கள் பிரசாந்த், லாசர் ஆரோக்கியராஜ் ஆகிய 3 பேரை நேற்று கைது செய்து அவர்களிடமிருந்து காரையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து 3 பேர் மீது 7 பிரிவின் கீழ் வழக்குப்பதிந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

அதிர்ச்சியில் உறைந்த போலீசார்

பேராசிரியர் விமல் ஆதித்தன் செல்போனை பறிமுதல் செய்த போலீசார் அதனை ஆய்வு செய்த போது, அதில் பேராசிரியை நதியா, நிர்வாணமாக உள்ள படங்கள், வீடியோக்களை பார்த்து அதிர்ச்சியில் உறைந்தனர். மேலும், நண்பர் பெரியமிளகுபாறையை சேர்ந்த லாசர் ஆரோக்கியராஜ் தன்னை ஒரு பத்திரிகையில் நிருபராக இருப்பதாக கூறி கட்ட பஞ்சாயத்துக்கள் செய்து வந்ததும் தெரியவந்தது.

Related Stories: