கந்தர்வகோட்டை பகுதியில் மிதமான மழையால் செழித்து வளரும் சோளப் பயிர்கள்

கந்தர்வகோட்டை : கந்தர்வகோட்டை பகுதியில் மிதமான மழையால் சோழப்பயிர்கள் செழுமையாக வளர்ந்து வருகிறது.புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை பகுதியில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே மழை பெய்ய தொடங்கி உள்ளது. இந்நிலையில் விவசாயிகள் அனைவரும் இயற்கை மழையை நம்பி விவசாயம் செய்ய தொடங்கியுள்ளனர். இதனால் விவசாய பணியாளர்களுக்கு நல்ல ஊதியத்தில் தினசரி வேலை கிடைத்து வருகிறது.

இதனால் விவசாயத் தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைகின்றனர். மழை பொழிந்து சாகுபடி நிலங்களில் மண் பொலபொலவென காணப்படுவதால், மண்ணில் உள்ள களைகளை அகற்றி உரமிட்டு வருகின்றனர். தற்போது சாரல் மழை அவ்வப்போது பெய்வதால் சோளப்பயிர்கள் தற்போது பசுமையாக காணப்படுகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories: