ஏவுகணை சோதனைகளை நிறுத்தி விட்டு பேச வாங்க: வடகொரியாவுக்கு அமெரிக்கா அழைப்பு

சியோல்: கடந்த சில மாதங்களாக வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நடத்தி, அண்டை நாடான தென்கொரியா, ஜப்பான் ஆகியவற்றை அச்சுறுத்தி வருகிறது. சமீபத்தில், நீர்மூழ்கி கப்பலில் இருந்து கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை வீசி சோதித்தது. இந்நிலையில், வடகொரியாவுக்கான அமெரிக்க பிரதிநிதி சுங் கிம் தென்கொரிய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் கூறுகையில், ‘‘வடகொரியா ஏவுகணை சோதனைகளை நிறுத்திவிட்டு, அமெரிக்கா உடனான அணுசக்தி ஒப்பந்தத்தை கடைபிடிக்க வேண்டும். ஆத்திரமூட்டும் செயல்களையும், சீர்குலைக்கும் சீண்டல்களையும் நிறுத்திவிட்டு பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும். எந்தவித நிபந்தனையும் இல்லாமல் வடகொரியாவின் பேச்சுவார்த்தையை சந்திக்க நாங்கள் தயார். இதில், அமெரிக்கா எந்தவித உள்நோக்கத்தையும் கொண்டிருக்கவில்லை,’’ என்றார்.

Related Stories: