3 ஆண்டுகளுக்கு பிறகு பீகார் திரும்பிய லாலு: வீட்டின் முன் மூத்த மகன் தர்ணா

பாட்னா: பீகார் முன்னாள் முதல்வரும், ராஷ்டிரிய ஜனதா தள கட்சித் தலைவருமான லாலு பிரசாத் யாதவ், கால்நடை தீவன ஊழல் வழக்கில் தண்டனை பெற்று, ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ராஞ்சி சிறையில் அடைக்கப்பட்டார். தண்டனையை அனுபவிப்பதற்காக கடைசியாக 2018ம் ஆண்டு பாட்னாவில் உள்ள தனது வீட்டில் இருந்து அவர் சென்றார். சில மாதங்களுக்கு முன் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட அவர், மருத்துவ சிகிச்சைக்காக டெல்லியில் உள்ள தனது மூத்த மகள் மிசா பாரதியின் வீட்டில் தங்கி இருந்தார். இந்நிலையில்,  3 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக நேற்று அவர் பீகார் திரும்பினார். அவருடன் மனைவி ரப்ரிதேவியும் வந்தார்.

விமான நிலையத்தில் லாலுவுக்கு அவருடைய கட்சிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். எப்போதும் சண்டை போட்டு கொண்டிருக்கும் லாலுவின் மகன்களான தேஜஸ்வி யாதவும், தேஜ் பிரதாப்பும் பகையை மறந்து, தந்தை ஒற்றுமையாக வரவேற்று வீட்டுக்கு அழைத்துச் சென்றனர். எப்போதும் உற்சாகமாக காணப்படும் லாலு, தற்போது உடல்நிலை பாதிப்பால் தளர்ந்து, தள்ளட்டத்துடன் விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்தார். இதற்கிடையே, வீட்டிற்கு வந்ததும் தந்தை லாலுவுடன் தன்னை பேச விடவில்லை என தேஜ்பிரதாப் குற்றம்சாட்டினார். பின்னர் வீட்டிற்கு வெளியே அவர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

Related Stories: