500 கிலோ கடல் அட்டை பறிமுதல்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே கிட்டங்கியில் பதுக்கியிருந்த 500 கிலோ கடல் அட்டைகளை வனத்துறையினர் பறிமுதல் செய்து 2 பேரை கைது செய்தனர். இலங்கைக்கு கடத்துவதற்காக ராமநாதபுரம் அருகே ஒரு கிட்டங்கியில் பதப்படுத்திய கடல் அட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக சென்னை வன காவல் படைக்கு தகவல் கிடைத்தது. இதன்படி, வனச்சரகர் லோகநாதன் தலைமையில், வனக்காப்பாளர்கள் தேவிபட்டினம் கடற்பகுதியில் நேற்று தீவிர சோதனை மேற்கொண்டனர். இதில் அங்குள்ள ஒரு கிட்டங்கியில் பதப்படுத்திய நிலையில் இருந்த 500 கிலோ கடல் அட்டைகள் மற்றும் பதப்படுத்த பயன்படும் பொருட்களை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக தேவிபட்டினம் சித்திக் (57), ஜாஹிர் உசைன் (27) ஆகியோரை கைது செய்தனர்.

Related Stories: