×

காஞ்சிபுரத்தில்; டெங்கு காய்ச்சலுக்கு சிறுமி பரிதாப பலி

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் டெங்கு காய்ச்சலுக்கு சிறுமி உயிரிழந்தார். காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் சன்னதி  தெருவை சேர்ந்தவர் விஜயகுமார். இவரின் மகள் ஸ்ருதி. இவர் அங்குள்ள தனியார் பள்ளியில் 7ம் வகுப்பு படித்தார். கடந்த ஐந்து நாட்களுக்கு மேலாக ஸ்ருதிக்கு கடும் காய்ச்சல் அடித்தது. அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். இந்த நிலையில், மாணவிக்கு டெங்கு பாதிப்பு இருப்பது உறுதியானது.

இதையடுத்து சிறுமியை காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் சிறுமி ஸ்ருதி உயிரிழந்தார். இதனால் பெற்றோர் கதறி அழுதனர். இது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.Tags : In Kanchipuram; Little girl dies of dengue fever
× RELATED கொரோனாவைத் தொடர்ந்து டெங்கு பாதித்தவருக்கும் கருப்பு பூஞ்சை தாக்குதல்