×

கட்சி கட்டுப்பாட்டை மீறிய மதுராந்தகம் தெற்கு ஒன்றிய செயலாளர் சஸ்பெண்ட்: துரைமுருகன் அறிவிப்பு

சென்னை: கட்சி கட்டுப்பாட்டை மீறிய மதுராந்தகம் தெற்கு ஒன்றிய செயலாளரை சஸ்பெண்ட் செய்து திமுக பொது செயலாளர் துரைமுருகன் நடவடிக்கை எடுத்துள்ளார். திமுக பொது செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிவிப்பு: காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம், மதுராந்தகம் தெற்கு ஒன்றியச் செயலாளர் எண்டத்தூர் வி.ஸ்ரீதரன், கட்சி கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வந்ததால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி (சஸ்பெண்ட்) வைக்கப்படுகிறார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. துரைமுருகன் வெளியிட்டுள்ள மற்றொரு அறிவிப்பில், ” விழுப்புரம் வடக்கு மாவட்டம், மரக்காணம் மத்திய ஒன்றியப் பொறுப்பாளர் நல்லூர் எஸ்.கண்ணன் மற்றும் முன்னாள் மாவட்ட பிரதிநிதி பாரத்குமார் ஆகியோர் கட்சி கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வந்ததால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Southern Union ,Madurandam ,Durymuruhan , Madurantakam Southern Union Secretary suspended for violating party control: Thuraimurugan announcement
× RELATED மதுராந்தகம் அருகே தொடர் மழையால் மண்...