×

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை: வானிலை மையம் தகவல்

சென்னை: புதுக்கோட்டை, டெல்டா மாவட்டங்களில் நாளை முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. ராமநாதபுரம், தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, திருச்சி, விழுப்புரம், கடலூர், செங்கப்பட்டில் கனமழை பெய்யும். வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும்.


Tags : Tamil Nadu ,Meteorological Department , Heavy rains in Tamil Nadu for 5 days due to atmospheric circulation: Meteorological Department
× RELATED 12 மணி நேரத்தில் உருவாகிறது காற்றழுத்த...