×

தீபாவளி கூட்ட நெரிசலில் சூரியன் எப்.எம் 91.9 கொரோனா விழிப்புணர்வு

ஈரோடு:  ஈரோட்டின் முதன்மையான பண்பலை ரேடியோ, சூரியன் எப்.எம் 91.9, சமூகநலன் கருதி பல்வேறு  விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது, கொரோனா காலத்தில் ‘’S.M.S’’  எனப்படும் ‘’சோப்பு, மாஸ்க், சோசியல் டிஸ்டன்ஸ்’’ குறித்து நேயர்களுக்கு  விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. தற்போது,  தீபாவளி பண்டிகையொட்டி, மக்கள் பொருட்கள் வாங்க, கடை வீதிகளில் அதிகம் கூடுகின்றனர். இப்படி கூடும்போது பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றவேண்டும் என்பதை வலியுறுத்தி, முக்கிய சந்திப்புகளில் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

விழிப்புணர்வு பதாகை ஏந்தி, சூரியன் எப்.எம். 91.9 பிரதிநிதிகள் முக்கிய வீதிகளில் வலம் வருகின்றனர். கொரோனா  தொற்று பெருமளவில் குறைந்து வரும் இவ்வேளையில், மீண்டும் தொற்று அதிகரித்து விடக்கூடாது  என்பதில் அனைவரும் கவனமாக இருக்கவேண்டும், ‘’S.M.S’’ எனப்படும் இம்மூன்றையும் அவசியம் கடைபிடிக்க வேண்டும் என ‘’லுக் வாக்கர்ஸ்’’ மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிகழ்ச்சி வரும் அக்டோபர் 31ம் தேதி வரை தொடரும் என சூரியன் எப்.எம். 91.9 நிறுவனம் அறிவித்துள்ளது. கேளுங்க, கேளுங்க, கேட்டுக்கிட்டே இருங்க... சூரியன் எப்.எம்.91.9 S.M.S.-ஐ கடைபிடிப்போம், கொரோனாவை  வெல்வோம்.

Tags : Sun ,Deepavali , Deepavali, Sun FM 91.9, Corona, Awareness
× RELATED சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூர்யா...