டிவிஎஸ் ரேடியான் (விலை சுமார் ₹68,557 முதல்)

டிவிஎஸ் ரேடியான் பைக் ஏற்கெனவே சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு விற்பனையாகி வருகிறது. இதில் 10 வண்ணங்கள் உள்ளன. தற்போது, எதிர்வரும் பண்டிகை சீசனை கருத்தில் கொண்டு, புதிதாக 2 வண்ணங்களை டிவிஎஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. கருப்பு மற்றும் நீலம், கருப்பு மற்றும் சிவப்பு என இரண்டு டூயல் டோன் வேரியண்ட்களில் இவை கிடைக்கும். இன்ஜின் உள்ளிட்ட மற்ற அம்சங்களில் மாற்றமில்லை. இதில் உள்ள 109.7 சிசி இன்ஜின், அதிகபட்சமாக 7,350 ஆர்பிஎம்-ல் 8.08 பிஎச்பி பவரையும், 4,500 ஆர்பிஎம்-ல் 8.7 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். ஷோரூம் விலையாக பேஸ் எடிஷன் சுமார் ₹64,597 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டூயல் டோன் ₹68,557, டிஸ்க் பிரேக்குடன் அதிகபட்ச விலையாக ₹71,557 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Related Stories: