மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு புதிய தலைவர் நியமனம்

சென்னை: தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைவராக இருந்தவர் வெங்கடாச்சலம் எழுந்த புகாரையடுத்து, அவரது வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தினர். இதில் பணம் மற்றும் ஆவணங்கள் சிக்கியது. இதையடுத்து தமிழக அரசின் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத் துறை செயலாளராக உள்ள சுப்ரியா சாகு ஐ.ஏ.எஸ்க்கு கூடுதல் பொறுப்பாக தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில், தற்போது தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திற்கு புதிய தலைவராக உதயன் ஐஎப்எஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து தமிழக அரசு பிறப்பித்துள்ள உத்தரவில், ‘ தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக, கூடுதல் முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் உதயன் ஐஎப்எஸ் நியமிக்கப்படுகிறார்’ எனக்கூறப்பட்டுள்ளது. 

Related Stories: