புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டம்-2021 ஊழியர்களுக்கு தெரியும் வகையீில் அறிவிப்பு பலகையில் ஒட்ட வேண்டும்: டிஜிபி சைலேந்திர பாபு அறிவுறுத்தல்

சென்னை: தமிழக  டிஜிபி சைலேந்திர பாபு அனுப்பியுள் சுற்றறிக்கை: அரசு ஊழியர்கள் மற்றும் அவர்களது தகுதியான குடும்ப உறுப்பினர்களுக்கு பணச்செலவில்லா மருத்துவ வசதியை வழங்கும் பொருட்டு, ஏற்கனவே அரசால் நடைமுறைப் படுத்தப்பட்டு வந்த புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம்-2016ம், கடந்த ஜூன் 30ம் தேதி உடன் முடிவடைந்ததை தொடர்ந்து, ‘புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்- 2021’ அமல்படுத்தப்பட்டு யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனத்தால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம் 2021ல் உள்ள காப்பீட்டு விவரங்கள் மற்றும் வசதிகள்: மருத்துவ காப்பீட்டு வசதியானது கடந்த ஜூலை 1ம் தேதி முதல் 2025ம் ஆண்டு ஜூன் 30ம் தேதி வரையிலான 4 வருட தொகுப்பு ஆண்டிற்கு வழங்கப்படும். 203 நோய்களுக்கான சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சைகளுக்கு அதிகபட்சமாக ரூ.5 லட்சம் வரை வழங்கப்படும். 7 வகையான நோய்களுக்கான சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சைகளுக்கு அதிக பட்சமாக ரூ.10 லட்சம் வரை வழங்கப்படும்.

மேலும் அரிதான நோய்கள் மற்றும் சிகிச்சைகளுக்கு ரூ.20 லட்சம் வரை நிதித்துறை செயலாளர், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை செயலாளர் மற்றும் காப்பீட்டு நிறுவனத்தால் நியமிக்கப்பட்ட பிரதிநிதி ஆகியோர்களை கொண்ட உயர்மட்ட குழுவின் பரிந்துரையின் பேரில் வழங்கப்படும்.அங்கீகரிக்கப்பட்ட 1169 மருத்துவமனைகளின் விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம்-2021ன் விவரங்கள் அறிய  கட்டணமில்லா தொலைபேசி எண் (1800 233 5666) தொடர்பு கொள்ளலாம். மேலும் இதன் விவரங்களை அனைத்து காவலர்களும் அறியும் வண்ணம் காவல் நிலையங்களில் உள்ள அறிவிப்பு பலகையில் ஒட்டி வைக்க வேண்டும்.

Related Stories:

More
>