×

ரயில்கள் ரத்து

சென்னை: பராமரிப்பு பணி காரணமாக இன்று, 31ம் தேதி, நவம்பர் 7ம் தேதியில் சென்னை கடற்கரையில்  இருந்து காலை 11 மணி, 11.30 மணி, 11.45 மணி, 12.20 மணி, 12.40 மணி, 1.40  மணி, 2.30 மணி ஆகிய நேரங்களில் தாம்பரத்திற்கு புறப்படும் மின்சார ரயில்கள் முழுவதுமாக  ரத்து செய்யப்படுகிறது. இதேபோல் சம்மந்தப்பட்ட தேதிகளில் தாம்பரத்தில்  இருந்து காலை 11.30 மணி, 12.10 மணி, 12.30 மணி, 1.50 மணி, 2.50 மணி, 3.30  மணிக்கு சென்னை கடற்கரைக்கு புறப்படும் ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது.

திருமால்பூரில் இருந்து காலை 10.40 மணி, 1.50 மணிக்கு சென்னை  கடற்கரைக்கு புறப்படும் ரயில்களும் ரத்து செய்யப்படுகிறது. மேலும் கடற்ரையில் இருந்து காலை 11.15 மணி, 12 மணி, 1 மணி, 1.20 மணி, 2 மணி, 3  மணிக்கு செங்கல்பட்டுக்கு புறப்படும் ரயில்கள் கடற்கரை-தாம்பரம்  இடையே ரத்து செய்யப்படுகிறது. மேலும் மறுமார்க்கத்தில் செங்கல்பட்டில்  இருந்து காலை 10.15 மணி, 11 மணி, 12.25 மணி, 1.25 மணி, 2.15 மணிக்கு கடற்கரைக்கு புறப்படும் ரயில்கள் தாம்பரம்- கடற்கரை இடையே ரத்து  செய்யப்படுகிறது.

Tags : Train, cancellation
× RELATED தெற்கு மத்திய ரயில்வே மண்டலத்தில்...