×

ஆசனூர் அருகே பயணிகள் பீதி அரசு பஸ் கண்ணாடியை உடைத்து காட்டு யானை அட்டகாசம்

சத்தியமங்கலம்: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் இருந்து 40க்கும் மேற்பட்ட பயணிகளுடன் மைசூர் செல்வதற்காக தமிழக அரசு பஸ் நேற்று ஆசனூர் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது வனப்பகுதியைவிட்டு வெளியேறிய காட்டு யானை ஒன்று குட்டியுடன் சாலையில் நடந்துள்ளது. இதனை கண்ட டிரைவர் பஸ்சை நிறுத்தினார். பஸ் அருகே வந்த காட்டு யானை, பக்கவாட்டு கண்ணாடியை தும்பிக்கையால் உடைத்து சேதப்படுத்தியது. இதனால் டிரைவர் மற்றும் பயணிகள் பீதியடைந்தனர். சிறிது நேரம் பஸ் முன்பு நின்றிருந்த காட்டு யானை பின்னர் நகர்ந்து வனத்துக்குள்  சென்றது.


Tags : Asanur , Asanur, panic, government bus, glass, wild elephant
× RELATED சத்தியமங்கலம் அருகே ஆசனூரில் காட்டு யானை தாக்கி பெண் பலி