வெளிநாடு வாழ் தமிழர்களின் குழந்தைகளுக்கு தமிழ் கற்பிக்க முடிவு: மெட்ரிக் பள்ளி தமிழ் ஆசிரியர்கள் விவரம் சேகரிப்பு

வேலூர்: அமெரிக்கா, ரஷ்யா, சீனா, மலேசியா, சிங்கப்பூர் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் தமிழர்கள் வசித்து வருகின்றனர். இங்கு வாழும் தமிழர்களின் குழந்தைகளுக்கு 2 மற்றும் 3ம் மொழியாக தமிழ் மொழியை கற்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி தமிழ் இணைய கல்விக்கழகத்தில் பாடத்திட்டங்கள் உருவாக்கம், பாடல்கள் எழுதுதல், பயிற்சி வகுப்புகள், மாணவர்களின் திறன் அறிதல் குறித்து, அந்தந்த பள்ளிகளில் பணிபுரியும் அனுபவம் வாய்ந்த தமிழ் ஆசிரியர்களின் விவரங்கள்  நேரடியாக சென்னையில் உள்ள தமிழ் இணையக்கல்வி கழகத்திற்கு அனுப்பி வைக்கும்படி தமிழகத்தில் உள்ள மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர்கள், தாளாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பள்ளிகல்வித்துறை மூலமும், அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மூலமாக, மெட்ரிக் பள்ளி ஆசிரியர்களின் விவரங்கள் அனுப்ப சுற்றறிக்ைக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் வெளிநாடு வாழ் தமிழர்களின் குழந்தைகள் தமிழ்மொழியை கற்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என்று கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories:

More
>