நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் அறிவிப்பு மறு குடியமர்வு வரைவு கொள்கை குறித்து கருத்து தெரிவிக்க காலஅவகாசம் நீட்டிப்பு

சென்னை:  தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் வெளியிட்ட அறிவிப்பு:  ஆட்சேபனைக்குரிய புறம்போக்கு நிலங்களில் இருந்து மறுகுடியமர்வு செய்யப்படும் குடிசைப்பகுதி மக்கள் நியாயமாகவும் மனிதாபிமானமாகவும் நடத்தப்படுவதை உறுதி செய்ய புதிய குடிசைப்பகுதி மறு குடியமர்வு மற்றும் மறுவாழ்வு கொள்கை உருவாக்கப்படும் என நிதி மற்றும் மனித வள மேலாண்மை துறை அமைச்சர் 2021-22ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அறிவித்தார்.   அதன்படி, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் மறுகுடியமர்வு மற்றும் மறுவாழ்வு கொள்கை வரைவு  இணையதளத்தில் 12.10.2021 அன்று வெளியிடப்பட்டது. வரைவு கொள்கை குறித்து அனைத்து தரப்பினரிடமிருந்து பரிந்துரைகள் மற்றும் கருத்துகள் 15 நாட்களுக்குள் (27.10.2021) ஆன்லைன் உள்ளீட்டு படிவு இணைப்பில் பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டது. பரிந்துரைகள் மற்றும் கருத்துகளை தெரிவிக்க கால நீட்டிப்பு செய்ய வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

பொது மக்களின் கோரிக்கையை ஏற்று கூடுதலாக 7 நாட்கள் அதாவது 3.11.2021 வரை கால நீட்டிப்பு செய்யப்படுகிறது. பொதுமக்கள் தங்களின் பரிந்துரைகள் மற்றும் கருத்துகளை //www.tnscb.org/wp-content/uploads/2021/10/Draft-RR-Policy-tamil.pdf  என்ற ஆன்லைன் உள்ளீட்டு படிவத்திலோ,  அல்லது தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் கோட்ட அலுவலகங்களில் கிடைக்கப் பெறும் வரைவு கொள்கை நகலினை  பெற்று தலைமை சமுதாய வளர்ச்சி அலுவலர், எண்.5, காமராஜர் சாலை, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், சென்னை- 5 என்ற முகவரிக்கு கடிதம் மூலம் அனுப்பலாம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories: