6வது மெகா தடுப்பூசி முகாமில் 22.33 லட்சம் பேருக்கு தடுப்பூசி

சென்னை: தமிழகம் முழுவதும் 6வது கட்டமாக 50 ஆயிரம் இடங்களில் மெகா கொரோனா  தடுப்பூசி சிறப்பு முகாம் நேற்று நடந்தது. இதில் 22.33 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. 6வது கட்ட மெகா தடுப்பூசி முகாம் 50 ஆயிரம் இடங்களில் நேற்று நடந்தது. இரண்டாம் தவணை ஊசி  போடுபவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது.  காலை 7 மணிக்கு முதல் இரவு 7 மணி வரை நடந்த தடுப்பூசி முகாமில் தமிழகம் முழுவதும் 22,33,219 பேருக்கு  தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது. அதில் முதல் தவணையாக 8,67,573  பேரும், இரண்டாவது தவணையாக 13,65,646 பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இன்று தடுப்பூசி முகாம் நடைபெறாது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆகஸ்ட் 26ம் தேதி சென்னை மாநகராட்சியின் சார்பில் 200 வார்டுகளில் நடத்தப்பட்ட 400 தடுப்பூசி சிறப்பு முகாம்கள் மூலம் 1,35,865 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. தொடர்ந்து, நேற்று சென்னை மாநகராட்சியின் சார்பில் 1600 தடுப்பூசி சிறப்பு முகாம்களில் மாலை 6.30 மணி நிலவரப்படி 1.60 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

மிக்சி, குக்கர் அறிவிப்பால் மக்கள் ஆர்வம்

சென்னை  மாநகராட்சி சார்பில் தீவுத்திடல் அருகே சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம்  ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் நிறைய பேர் வந்து தடுப்பூசி செலுத்திக்  கொள்ள வேண்டும் என்பதற்காக ஒரு வித்தியாசமான முறையில் தடுப்பூசி போட்டுக்  கொள்ள வந்தவர்களுக்கு குலுக்கல் முறையில் மிக்சி, கிரைண்டர், குக்கர்  போன்ற பொருட்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால், இங்கு  ஏராளமானோர் வந்து தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.

Related Stories: