ஈரோடு பண்ணைகளில் உள்ள 5 லட்சம் கோழிகளை கொல்வதற்கு தடை: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

புதுடெல்லி: தமிழகத்தில் ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களில் கோழி பண்ணைகள் அதிகம் உள்ளது. இந்நிலையில், ஈரோடு மாவட்டத்தில் இருக்கும் தனியார் கோழிப்பண்ணைகளில் உரிய சுற்றுச்சூழல் விதிமுறைகள், பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை எனக்கூறி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.  இதை விசாரித்த நீதிமன்றம், விதிமுறைகளை கடைபிடிக்காமல் பண்ணைகளில் இருக்கும் சுமார் 5  லட்சம் கோழிகளை அழிக்கவும், அதேப்போன்று புதியதாக அங்கு கோழிகளை இறக்குமதி செய்யவும் தடை விதித்து சில மாதங்களுக்கு முன் உத்தரவிட்டது.

இந்த உத்தரவுக்கு எதிராக தனியார் கோழிப்பண்ணை உரிமையாளர்கள் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், உயர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

Related Stories: