நெல்லுக்கு தீ வைக்கும் விவசாயி: வருண் காந்தி பரபரப்பு வீடியோ

புதுடெல்லி:  உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த விவசாயி ஒருவர், நெல்லுக்கு தீ வைக்கும் வீடியோவை பாஜ எம்பி வருண் காந்தி சமூகவலைதளத்தில் பகிர்ந்துகொண்டுள்ளார். வேளாண் கொள்கை குறித்து அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார். உத்தரப்பிரதேசத்தின் லக்கீம்பூர்கேரியில் விவசாயிகள் 4 பேர் கொல்லப்பட்டது மற்றும் வன்முறையில் 4 பேர் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு பாஜ எம்பி வருண் காந்தி கடும் கண்டனம் தெரிவித்து இருந்தார். இதனை தொடர்ந்து பாஜ தேசிய நிர்வாக குழுவில் வருண் காந்தியின் பெயர் இடம்பெறவில்லை. இந்நிலையில், வேளாண் சட்டங்களை குறித்து ஒன்றிய அரசை மறைமுகமாக விமர்சிக்கும் வகையில் வீடியோ ஒன்றை டிவிட்டரில் பகிர்ந்துள்ளார்.

இந்த வீடியோவில், உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த விவசாயி ஒருவர், தனது நிலத்தில் இருக்கும் நெற்பயிரை தீ வைத்து எரிக்கிறார். ‘‘சமோத் சிங், உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த விவசாயி. இவர் கடந்த 15 நாட்களாக தனது நெல்லை விற்பனை செய்வதற்காக மண்டிகளுக்கு சென்று வந்தார். ஆனால், நெல்லை விற்க முடியவில்ைல. நெல்லை விற்க முடியாத நிலையில் விரக்தியில் தனது நெல்லுக்கு அவரே தீ வைத்து எரித்தார். இந்த நடைமுறை விவசாயிகளை எங்கே கொண்டு செல்கிறது? நமது விவசாய கொள்கையை மறுபரிசீலனை செய்வது காலத்தின் தேவையாகும்.’ என குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: