×

முல்லைப் பெரியாறு விவகாரத்தில் ஒன்றிய அரசு தவறான அறிக்கை: உச்ச நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

புதுடெல்லி: முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் ஒன்றிய அரசு ஆதாரங்களை மறைத்து தவறான அறிக்கையை தாக்கல் செய்துள்ளதாக  உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முல்லைப் பெரியாறு அணையால் மக்களுக்கு எந்த பாதிப்பும் வராமல் நடவடிக்கை எடுப்பதில், துணைக்குழு வும், தேசிய பேரிடர் மேலாண்மை குழுவும்இணைந்து செயல்பட வேண்டும் என கடந்த 2018ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.இந்நிலையில், முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு துணைக்குழுவை கலைக்க கோரியும், அணை பாதுகாப்பு மற்றும் இயக்கமுறைகள் சரியாக இல்லை என்றும் ஜாய் ஜோசப் என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம்,  இதற்கு விரிவான பதில் மனு தாக்கல் செய்யும்படி ஒன்றிய அரசுக்கு கடந்த 9ம் தேதி உத்தரவிட்டது. இதையடுத்து, ‘முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக இருக்கிறது. பராமரிப்பு பணிகளும் முடிந்து விட்டது. என வே, அணையை ஆய்வு செய்ய வேண்டும் என்ற பேச்சுக்கே இடமில்லை,’ என ஒன்றிய அரசு கடந்த 18ம் தேதி அறிக்கை தாக்கல் செய்தது.

இந்நிலையில், மனுதாரர் ஜோய் ஜோசப் தரப்பில் நேற்று புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில்,‘ஒன்றிய அரசின் அறிக்கை, தொழில்நுட்ப ரீதியாக தவறாக உள்ளது. ஏனெனில், உலகில் உள்ள 6 அணைகள் கட்டமைப்பு ரீதியாக பலவீனமாகவும், இயற்கை சீற்றத்தாலும் செயலிழக்கும் அபாயத்தில் இருக்கிறது என ஐநா.வின் நீர், சுற்றுச்சூழல் சுகாதாரத்துக்கான ஆராய்ச்சி பல்களைகழகத்தின் ஆய்வில்கூறப்பட்டுள்ளது. அதில் முல்லைப் பெரியாறு அணையும் ஒன்றாகும். இந்த பட்டியலில் இருக்கும் 4அணைகளின் செயல்பாடு ஏற்கன ேவ நிறுத்தப்பட்டு விட்டது, ஜிம்பாப்பேவில் உள்ள அணையும், முல்லைப் பெரியாறும் மட்டுமே செயல்பாட்டில்  உள்ளன. இந்த அணையின் கீழ் பகுதியில் வசிக்கும் மக்கள் உயிருக்கு எந்த நேரத்திலும் ஆபத்து வரலாம். இதை ஒன்றிய அரசு தனது அறிக்கையில் மறைத்து விட்டதால் அதனை நிராகரிக்க வேண்டும். இந்த அறிக்கைக்கு பதிலளிக்க நான்கு வாரம் எங்களுக்கு அவகாசம் வேண்டும்,’ என கூறப்பட்டுள்ளது.

Tags : U.S. government ,Mullaperiyar ,Supreme Court , Mullaperiyar, Union Government, Supreme Court, indictment
× RELATED நாடு முழுவதும் வீடு வீடாக சென்று...