தெலங்கானாவில் நிலநடுக்கம்

திருமலை: தெலங்கானா மாநிலத்தில் 4 ரிக்டர் அளவு நிலநடுக்கம் பதிவானதால் பொதுமக்கள் பீதியடைந்து உள்ளனர். தெலுங்கானா மாநிலம், நகர், சுன்னம்பட்டிவாடா, சீதாரம்பள்ளி, நஸ்பூர், சீதாராம்பூர் உள்ளிட்ட பல இடங்களில் நேற்று மதியம் 2.15 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நில நடுக்கம் 4 ரிக்டர் அளவு பதிவானதாகவும், ராமகுண்டத்தில் இருந்து  தென்மேற்கே 8 கி.மீ. கரீம்நகர் நகருக்கு வடகிழக்கே 45 கி.மீ. பூமிக்குள் 20 கி.மீ.  ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சுமார் 2 வினாடிகள் மேற்கண்ட பகுதிகளில் நிலநடுக்கத்தை உணர்ந்த பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியில் அச்சத்துடன் ஓடி வந்தனர். நிலநடுக்கம் குறைந்தளவில் பதிவாகி உள்ளதால் பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால், பொதுமக்கள் ஒருவித பீதியுடன் உள்ளனர்.

Related Stories:

More
>