×

உத்தரகாண்டில் கடும் பனிப்பொழிவு மலையேற்றம் சென்ற வீரர்கள் 12 பேர் பலி

டேராடூன்:  உத்தரகாண்டில் கடுமையான பனிப்பொழிவில் சிக்கி மலையேற்ற வீரர்கள் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.  உத்தரகாண்ட் மாநிலம், உத்தரகாசி மாவட்டத்தில் உள்ள ஹர்சில்லில் இருந்து சிட்குல் பகுதிக்கு லம்காகா வழியாக மலையேற்ற வீரர்கள் சென்றனர். அப்போது, கடுமையான பனிப்பொழிவினால்பனிச்சரிந்து இவகள் சிக்கினர். இவர்களை மீட்கும் பணியில் விமானப்படை ஈடுபடுத்தப்பட்டுள்ளது. இதுவரை 12 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது. டெல்லியை சேர்ந்த ஒரு பெண், மேற்கு வங்கத்தை சேர்ந்த 9 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், இருவர் யார் என்பது இன்னும் அடையாளம் காணப்படவில்லை.

இது தொடர்பாக உத்தரகாண்ட் டிஜிபி கூறுகையில், ‘‘ஹர்சில்லில் இருந்து சென்ற 11 பேர் கொண்ட குழுவில் 7 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது. 2 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். மேலும், இரண்டு பேரை காணவில்லை. இதேபோல் லம்காகா அருகே காணாமல் போன மற்றொரு 11 பேர் கொண்ட குழுவில் 5 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது. காணாமல் போனவர்களை மீட்கும் பணியில் விமான படை ஈடுபடுத்தப்பட்டுள்ளது” என்றார்.


Tags : Uttarakhand , In Uttarakhand, snowfall, soldiers, 12 killed
× RELATED உத்தரகாண்டில் லேசான நிலநடுக்கம்