திருப்பதி ஏழுமலையான் கோயில் இலவச தரிசன டிக்கெட் 30 நிமிடங்களில் காலி

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் இலவச தரிசன டிக்கெட் ஆன்லைனில் நேற்று வெளியிடப்பட்ட அரை மணி நேரத்தில் பக்தர்கள் முன்பதிவு செய்தனர்.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கொரோனா பரவல் காரணமாக தற்போது விஐபி தரிசன டிக்கெட் மற்றும் ஆன்லைன் மூலம் ₹300 டிக்கெட் மற்றும் இலவச தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் மட்டுமே சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். அதன்படி வரும் நவம்பர், டிசம்பர் மாதத்திற்கான ₹300 சிறப்பு தரிசன டிக்கெட் நேற்றுமுன்தினம் காலை வெளியிடப்பட்டது.

டிக்கெட்கள் வெளியான ஒன்றரை மணி நேரத்திற்குள் அனைத்து டிக்கெட்டுகளையும் பக்தர்கள் முன்பதிவு செய்தனர். இதில் கிராமப்புறங்களில் உள்ள பக்தர்கள் ஜியோ கிளவுட் தொழில்நுட்பம் மூலம் மொபைல் போன்கள் மூலம் தரிசன டிக்கெட்டுகளை முன்பதிவு செய்தனர். தொடர்ந்து நவம்பர், டிசம்பர் மாதத்துக்கான இலவச தரிசன டிக்கெட் நேற்று காலை 9 மணியளவில் வெளியிடப்பட்டது. அனைத்து டிக்கெட்டுகளை அரை மணி நேரத்தில் பக்தர்கள் முன்பதிவு செய்தனர்.

Related Stories:

More
>