வெஸ்ட் இண்டீஸ் அதிர்ச்சி தோல்வி

துபாய்: இங்கிலாந்து அணியுடனான சூப்பர் 12 சுற்று லீக் ஆட்டத்தில், நடப்பு சாம்பியன் வெஸ்ட் இண்டீஸ் 55 ரன்னுக்கு ஆல் அவுட்டாகி அதிர்ச்சி தோல்வியை சந்தித்தது. துபாயில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்துவீசியது. படுமோசமாக விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்து அணிவகுக்க, அந்த அணி 14.2 ஓவரில் வெறும் 55 ரன்னுக்கு சுருண்டது.

இங்கிலாந்து பந்துவீச்சில் ரஷித் 2.2 ஓவரில் 2 ரன்னுக்கு 4 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். மொயீன், மில்ஸ் தலா 2, வோக்ஸ், ஜார்டன் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து 8.2 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 56 ரன் எடுத்து வென்றது. ராய் 11, பேர்ஸ்டோ 9, மொயீன் 3, லிவிங்ஸ்டோன் 1 ரன்னில் வெளியேறினர். பட்லர் 24 ரன், கேப்டன் மார்கன் 7 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இங்கிலாந்துக்கு 2 புள்ளிகள் கிடைத்தன. மொயீன் அலி ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

Related Stories:

More
>