தண்டவாளத்தில் மண் சரிவு: மலை ரயில் நடுவழியில் நிறுத்தம்

மேட்டுப்பாளையம்: தண்டவாள பாதையில் மண்சரிவு காரணமாக 180 பயணிகளுடன் சென்ற மலை ரயில், மீண்டும் மேட்டுப்பாளையம் திரும்பியது. மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூருக்கும், குன்னூரில் இருந்து ஊட்டிக்கும் மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் இருந்து இன்று காலை 7.10 மணிக்கு வழக்கம்போல் 180 பயணிகளுடன் ஊட்டிக்கு மலை ரயில் புறப்பட்டு சென்றது. ரயில், கல்லார் ரயில் நிலையத்தை அடைந்தது. சிறிது நேரத்தில் அங்கிருந்து புறப்பட்டு அடர்லி நோக்கி சென்றது.

அடர்லி ரயில் நிலையத்தை அடையும்போது தண்டவாளத்தில் மண்சரிவு ஏற்பட்டிருந்தது. பாறைகளும் சரிந்து விழுந்து கிடந்தது. இதைப்பார்த்த பிராட்மேன், உடனடியாக என்ஜின் டிரைவருக்கு தகவல் அளித்து, ரயிலை நிறுத்தினார். இதனால் ரயிலில் பயணம் செய்த பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதைத்தொடர்ந்து ரயில், 180 பயணிகளுடன் மீண்டும் மேட்டுப்பாளையம் ரயில் நிலையம் திரும்பியது.

Related Stories:

More
>