அருமனை அருகே சாலையில் கொட்டப்படும் கழிவுகளால் சுகாதாரக்கேடு

அருமனை: குழித்துறை - ஆறுகாணி சாலை குமரி மாவட்ட மலையோர பகுதிகளை இணைக்கும் முக்கிய சாலை. இதனால் தினசரி ஆயிரகணக்கானோர் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர். இந்த சாலையின் ஓரங்களில் அங்காங்கே குப்பை கழிவுகள் மலை போல் குவிக்கப்பட்டுள்ளன. அருமனை அடுத்த  படப்பச்சையில்  ரோட்டோரம்   குவியல், குவியலாக கழிவுகளை குவித்து வைத்துள்ளனர். பிளாஸ்டிக் பொருட்கள், வீட்டு கழிவுகள், உணவு கழிவுகள், கோழிக்கடை கழிவுகள் என கொண்டு கொட்டுவதால் துர்நாற்றம் வீசி அப்பகுதி வழியாக செல்லும் பயணிகளும், அப்பகுதியில் வாழும் பொது மக்களும் அவதி பட்டு வருகின்றனர்.

மேலும் இந்த கழிவுகளால் இப்பகுதி முழுவதும் சுகாதாரக்கேடு ஏற்படும் சூழலும் உள்ளது. இங்கு கொட்டப்படும் இறைச்சி கழிவுகள் மற்றும் உணவு பொருட்களுக்காக கூட்டம் கூட்டமாக நாய்கள் வருகின்றன. இதனால் தெரு நாய்களின்  தொந்தரவும் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்த பகுதியில் குப்பைகளை கொட்டாதீர் என அருமனை பேரூராட்சி சார்பில் எச்சரிக்கை பலகை வைத்தும் எந்த பலனுமில்லை. பல்வேறு பகுதிகளில் இருந்து வாகனங்களில் வந்து இரவு நேரங்களில் மூட்டை, மூட்டையாக கழிவுகளை சாலையிலேயே போட்டு செல்கின்றனர்.  எனவே தகுந்த நடவடிக்கை எடுக்க பேரூராட்சி அதிகாரிகள் முன் வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: