அதிமுக பொதுச்செயலாளராக உரிமை கோர சசிகலாவுக்கு எந்த அடிப்படை உரிமையும் இல்லை: நீதிமன்றத்தில் ஓபிஎஸ், இபிஎஸ் தரப்பு வாதம்..!

சென்னை: அதிமுக பொதுச்செயலாளராக உரிமை கோர சசிகலாவுக்கு எந்த அடிப்படை உரிமையும் இல்லை: நீதிமன்றத்தில் ஓபிஎஸ், இபிஎஸ் தரப்பு வாதம் செய்தனர். கட்சியும், சின்னமும் தங்களிடம் தான் உள்ளது; தேர்தல் ஆணையமும் இதை இறுதி செய்துள்ளது. சசிகலா தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல என்பதால் அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். அதிமுக பொதுச்செயலாளராக உரிமை கோர சசிகலாவுக்கு எந்தவித அடிப்படை உரிமையும் இல்லை என அதிமுக சார்பில் கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பு சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

அதிமுக பொதுச்செயலாளராக சசிகலாவை நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பொதுக்குழு செல்லாது என அறிவிக்க கோரி மனு ஒன்று தொடுக்கப்பட்டது. இந்த மனுமீதான விசாரணையில், நீக்கத்தை எதிர்த்து வழக்கு தாக்கல் செய்ய சசிகலாவுக்கு எந்த உரிமையும் இல்லை என்று அதிமுக தரப்பு வாதம் முன்வைத்தது. கட்சியும், சின்னமும் தங்களிடம்தான் உள்ளது என்றும் இதனை தேர்தல் ஆணையமும் இறுதி செய்துள்ளது எனவும் கூறியது. எனவே, சசிகலா தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல என்பதால் அபாரதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என அதிமுக தரப்பு தெரிவித்ததை தொடர்ந்து வழக்கை 27ம் தேதிக்கு ஒத்திவைத்தது சென்னை உரிமையியல் நீதிமன்றம்.

Related Stories: