கல்லூரி மாணவிகளின் வீதி நாடகம்

குன்னூர்: குன்னூர் வண்டிசோலை பகுதியில் உள்ள பிராவிடன்ஸ் மகளிர் கல்லூரியில் செயல்பட்டு வரும் தேசிய மாணவர் படை சார்பில் ஐக்கிய நாடுகள் தினத்தையொட்டி அமைதி மற்றும் ஒற்றுமை ஆண்டு என்ற தலைப்பில் வீதி நாடகம் மற்றும் நடனம் நிகழ்ச்சி நேற்று நடந்தது. அதை தொடர்ந்து எம்ஆர்சி ராணுவ மையத்திற்கு சுதந்திர தின ஓட்ட பந்தயம் நடந்தது.

மாணவிகள் வேற்றுமையில் ஒற்றுமையை வலியுறுத்தி பதாகைகள் ஏந்தி சென்றனர்.

இந்நிகழ்ச்சியில் பேராசிரியர் சிந்தியாஜார்ஜ் தலைமை வகித்து பேசுகையில், அக்டோபர்  24ம் தேதி ஐக்கிய நாடுகள் தினம் கொண்டாடப்படுகிறது. இவ்வாண்டு உலக ஒற்றுமை மற்றும் அமைதி ஆண்டாக அனுசரிக்கப் படுகிறது, என்றார்.

Related Stories:

More
>