ஈளடா தடுப்பணையை பராமரிக்க கோரிக்கை

கோத்தகிரி: கோத்தகிரி அதன் சுற்றுவட்டார பகுதிகளான ஈளடா, கதகட்டி, கெரடாமட்டம், கைக்காட்டி, ஓம்நகர், வார்விக், புதூர், கேர்ப்பட்ட போன்ற 20க்கும் மேற்பட்ட கிராமப் பகுதிகளில் வசிக்கும் மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது ஈளடா தடுப்பணை. இந்த அணையை கோத்தகிரி பேரூராட்சி மூலம் ஆண்டுதோறும் பராமரிக்க நிதி ஒதுக்கப்படுகிறது.

ஆனால் தடுப்பணை முறையாக பராமரிக்காததால் சிலர் மது அருந்துவது போன்ற செயல்களில் ஈடுபட்டு பாட்டிகளை அங்கு உள்ள நீர் தேக்கி வைக்கப்பட்ட பகுதிகளில் வீசி செல்கின்றனர். மேலும் இங்குள்ள கிராமப்புற பகுதிகளில் அதிகளவு விவசாயம் செய்யப்பட்டு வரும் நிலையில் குடிநீர் மட்டுமின்றி விவசாயத்திற்கும் இந்த நீரை பயன்படுத்தி வருகின்றனர்.

தற்போது பருவ மழை பெய்து முழு கொள்ளளவை எட்டியுள்ள நிலையில் உரிய பாதுகாப்பு இல்லாமலும் அணை தூர்வாரப்படாததாலும், வாகனங்கள் இங்கு கழுவப்படுவதாலும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே மது பிரியர்களின் கூடாரமாக பராமரிப்பு இன்றி காணப்படும் ஈளடா தடுப்பணையை முறையாக பராமரிக்க கோத்தகிரி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories:

More
>