கையுன்னி பகுதியில் விவசாய நிலத்தில் அத்துமீறி நடைபாதை அமைப்பு

பந்தலூர்:  பந்தலூர் அருகே கையுன்னி பகுதியில் விவசாய நிலத்தில் அத்துமீறி நடைபாதை அமைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சேரம்பாடி காவல் நிலையத்தில் புகார் அளிக்கபட்டுள்ளது. பந்தலூர் அருகே கையுன்னி பகுதியை சேர்ந்தவர் விவசாயி பௌலோஸ். இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி பீனா மட்டும் தனியாக வசித்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று இரவு அப்பகுதியில் உள்ள சிலர் தாங்கள் வசித்து வரும் குடியிருப்புகளுக்கு செல்வதற்கு பௌலோஸின் பட்டா நிலத்தில் இருந்த பலா மரங்கள், பாக்கு மரங்கள், மாமரங்கள் மற்றும் காபி செடிகள் உள்ளிட்ட விவசாய பயிர்களை ரம்பம் வைத்து அடியுடன் அறுத்து அத்துமீறி சாலை அமைத்துள்ளனர். இது குறித்து நேற்று பீனா சேரம்பாடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும் பந்தலூர் தாசில்தார் மற்றும் வனத்துறையினருக்கும் புகார் தெரிவித்துள்ளார்.

Related Stories:

More
>