முட்புதர்களை வெட்டி அகற்ற கோரிக்கை

ஊட்டி: ஊட்டியில் உள்ள மாவட்ட நீதிமன்றம், கலெக்டர் அலுவலகம், தபால் நிலையம், பிஎஸ்என்எல் அலுவலகம், கருவூல அலுவலகம் உள்ளிட்டவற்றிற்கு செல்ல பழைய டிபிஒ சந்திப்பில் இருந்து நடைபாதை உள்ளது. இதனை பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நடைபாதையை ஒட்டி இருபுறமும் வளர்ந்துள்ள முட்புதர்களை கடந்த சில மாதங்களாக முறையாக பராமரிக்காததால் அசுத்தமாக காட்சியளிக்கிறது.

இதனால் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத நிலை நீடிக்கிறது. எனவே இந்த நடைபாதையில் வளர்ந்து காணப்படும் முட்புதர்களை வெட்டி அகற்றிட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Related Stories:

More
>