சீர்காழி அருகே 120 வயது மூதாட்டி காலமானார்

சீர்காழி: சீர்காழி அருகே 120 வயது மூதாட்டி காலமானார். மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே கடைகாடு கிராமத்தில் வசித்து வந்தவர் கோவிந்தம்மாள். இவர் 120 வயதை கடந்தும் யாருடைய உதவி இல்லாமல் தன் வேலையை தானே செய்துவந்தார். கண் பார்வை, காது கேட்கும் திறன் தெளிவாக இருந்து வந்துள்ளது. மூன்று தலைமுறைகளை கண்ட கோவிந்தம்மாள் பழைய சோறு, மோர் அதிகளவில் உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்துள்ளார்.

கோவிந்தம்மாளுக்கு 12க்கும் மேற்பட்ட பேரக்குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் கோவிந்தம்மாள் நேற்றுமுன்தினம் இரவு திடீரென்று காலமானார். 120 வயதை கடந்த கோவிந்தம்மாள் உடலுக்கு சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் அஞ்சலி செலுத்தினர்.

Related Stories:

More
>