×

குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்; வெள்ளாற்றில் உள்ள கருவேல மரங்களை அகற்ற வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை

ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணம் அருகே எசனூர் ஊராட்சி அமைந்துள்ளது. இந்த ஊராட்சியில் கடந்த 2005ம் ஆண்டு ஏற்பட்ட பெரு வெள்ளத்தின்போது ஆற்றின் தென்புறம் வெள்ளநீர் பெருகி ஆற்றின் பக்கவாட்டு கரைகள் பலவீனம் அடைந்தது. இதனால் விவசாயிகள் நிலங்களில் மணல் குவியல்கள் ஏற்பட்டு 170 ஏக்கர் விவசாய விலை நிலங்கள் பயிர் செய்ய இயலாதவகையில் மாறி உள்ளது. மேலும் வெள்ளத்தின்போது பயிர்கள், மின்மோட்டார்கள் ஆற்றில் அடித்து செல்லப்பட்டது. ஆனால் இதற்கு அரசு இழப்பீடு தொகை வழங்கவில்லை. தற்போது ஆற்றின் போக்குமாறி தென்புறம் வழியே மழைநீர் செல்கிறது. இதனால் விவசாய விலை நிலங்கள் பாதிக்கும் நிலை உள்ளது.

இந்த ஆற்றில் இரண்டு முறை அரசு மணல் குவாரி மூலம் மணல் அள்ளப்பட்டுள்ளது. இதனால் ஆற்றில் வேலி, கருவேல மரங்கள் அதிகளவு முளைத்துள்ளது. ஏற்கனவே இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் 40 அடியில் இருந்து வந்தது. தற்போது 300 அடி அளவில் நீர்மட்டம் குறைந்து அதலபாதாளத்தில் சென்றுள்ளது. இதனால் குடிநீர் பிரச்னை ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே அரசு கருவேல மரங்களை முழுமையாக அகற்றியும், வெள்ளாற்றில் கதவுடன் கூடிய தடுப்பு சுவர் அமைத்து ஆற்றின் தென்புற கரையை பலபடுத்த வேண்டும் என இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : Risk of drinking water shortage; Removal of oak trees in floodplain: Farmers demand
× RELATED போராடும் பெண்களை ஒடுக்குவதற்காக...