×

மழைக்காலங்களில் அறுந்து கிடக்கும் வயர்களை தொடாதீங்க: மின்வாரியம் எச்சரிக்கை

தேனி: மழைக்காலங்களில் அறுந்து கிடக்கும் மின்வயர்களை தொட வேண்டாம் என மின்வாரியத் துறை எச்சரித்துள்ளது. தமிழ்நாடு மின்சார வாரிய சின்னமனூர் செயற்பொறியாளர் ரமேசுகுமார் கூறியதாவது: மின்விபத்துக்கள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி மின்விபத்துக்களை தவிர்க்கும் நடவடிக்கைகள் மின்வாரியத்துறை மூலம் எடுக்கப்பட்டு வருகிறது. வடகிழக்கு பருவமழை காலங்களில் மின்தடை ஏற்பட வாய்ப்புள்ளது. மின்கம்பம் மற்றும் மின்கம்பிகளும் சேதமடைய வாய்ப்புள்ளது.

இவ்வாறு சேதமடைந்த மின்கம்பிகள் தரையில் விழுந்து கிடந்தாலோ அல்லது தாழ்வாக தொங்கிக் கொண்டு இருந்தாலோ பொதுமக்கள் யாரும் அதனை தொட வேண்டாம். யாரையும் தொட அனுமதிக்க வேண்டாம் என அறிவுறுத்துகின்றோம். உடனடியாக அருகில் உள்ள மின்வாரிய பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவியுங்கள் என தெரிவித்துள்ளார்.


Tags : Electricity Board , Do not touch the wires that are cut during the rainy season: Electricity Board warning
× RELATED தளவாடப் பொருட்களுக்கு தட்டுப்பாடு...