அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து வீடு கட்டியதாக நடிகர் மன்சூர் அலிகான் வீட்டுக்கு சீல் : மாநகராட்சி நடவடிக்கை

சென்னை: நடிகர் மன்சூர் அலிகான் அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து வீடு கட்டியிருப்பதால் வீட்டை பூட்டி சீல் வைத்து மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் ஒட்டியுள்ளனர். சென்னை, சூளைமேடு பெரியார் பாதை மேற்கில் நடிகர் மன்சூர் அலிகான் வீடு அமைந்துள்ளது. இந்த வீட்ைட கடந்த 18 ஆண்டுகளுக்கு முன் 2400 சதுர அடி நிலத்தை அப்பாவு மற்றும் அவரது மகன் பாரி ஆகியோரிடம் இருந்து அவர் வாங்கியுள்ளார். பிறகு அது அரசு புறம்போக்கு நிலம் என்று தெரியவந்துள்ளது. இதையடுத்து, கடந்த 2019ம் ஆண்டு அரசு புறம்போக்கு நிலத்தை தன்னிடம் விற்ற நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நடிகர் மன்சூர் அலிகான் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அவர் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வந்தது. பின்னர் மன்சூர் அலிகான் 2019ம் ஆண்டு நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தார். இந்த வழக்கை நீதிமன்றம் அப்போதே தள்ளுபடி ெசய்து உத்தரவிட்டது.  மேலும் புறம் போக்கு நிலத்தை மீட்க மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் புறம்போக்கு நிலத்தை மீட்க சொல்லிய உத்தரவின் பேரில் மண்டலம் 8, கோட்டம் 105, மாநகராட்சி அதிகாரிகளால் திடீரென இன்று காலை சூளைமேடு, பெரியார் பாதையில் உள்ள நடிகர் மன்சூர் அலிகான் வீட்டிற்கு வந்து கதவை பூட்டி சீல் வைத்து நோட்டீஸ் ஒட்டி விட்டு சென்றனர்.

Related Stories:

More
>