×

ஆஸ்கருக்கு செல்கிறது நயன்தாரா - விக்னேஷ் சிவன் இணைந்து தயாரித்த கூழாங்கல் திரைப்படம் : படக்குழுவினர் மகிழ்ச்சி!!!

கொல்கத்தா  : நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இணைந்து தயாரித்த கூழாங்கல் திரைப்படம், ஆஸ்கருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. சினிமாத்துறையினருக்கு வழங்கப்படும் உலகின் உயர்ந்த விருதான ஆஸ்கர் விருது, சிறந்த வெளிநாட்டு திரைப்படங்களுக்கும் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படுகிறது. அந்த வகையில் 94-வது ஆஸ்கார் விருதுகள்  அடுத்த ஆண்டு மார்ச் 27ம் தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து ஆஸ்கர் விருது பட்டியலில்  ‘சிறந்த வெளிநாட்டு திரைப்படத்துக்கான’ பிரிவில் இந்திய திரைப்படம் ஒன்றை தேர்வு செய்யும் பணி கொல்கத்தாவில் நடைபெற்றது. இதில்  ‘சர்தார் உத்தாம்’, ‘ஷேர்னி’, ‘செல்லோ ஷோ’, ‘நாயாட்டு’  மற்றும் தமிழ் படங்களான ‘கூழாங்கல்’ ‘மண்டேலா’  உள்ளிட்ட 15 திரைப்படங்கள் ஆஸ்கார் விருதுக்கான பரிந்துரை பட்டியலில் இடம்பெற்றன.

இந்த நிலையில் ‘கூழாங்கல்’ திரைப்படம் சிறந்த வெளிநாட்டு திரைப்படத்திற்கான ஆஸ்கர் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டுள்ளது.அறிமுக இயக்குநர் வினோத்ராஜ் இயக்கத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள இந்த படத்தை தங்களது நயன்தாரா-விக்னேஷ் சிவன் ஜோடியின் ‘ரெளடி பிக்சர்ஸ்’ தயாரித்துள்ளது  ஏற்கனவே, இப்படம், நெதர்லாந்து நாட்டில் ரோட்டர்டாம் 50 வது சர்வதேச திரைப்பட விழாவில் ‘டைகர்’ பிரிவுக்கு போட்டியிட்டு விருதையும் வென்ற முதல் தமிழ் படமாக சாதனையும் செய்தது. உக்ரைனில் நடக்கும் ‘மோலோடிஸ்ட்’ சர்வதேச திரைப்பட விழா, சீனாவின் ஷாங்காய் நகரில் நடந்த ‘ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழா’விலும் திரையிட கூழாங்கல் தேர்வானது.


Tags : Nayanthara ,Oscars ,Vignesh Sivan , நயன்தாரா ,விக்னேஷ் சிவன்,கூழாங்கல்
× RELATED சொந்த படத்திற்கு மட்டும் டப்பிங் பேசும் நயன்தாரா