தஞ்சை பெரிய கோயிலில் தூய்மை இந்தியா திட்ட முகாம்: 300 கிலோ பிளாஸ்டிக் குப்பை சேகரிப்பு

தஞ்சை: பாரதிதாசன் பல்கலைக்கழகம் நாட்டு நலப்பணி திட்டம் மற்றும் நேரு யுவகேந்திரா சார்பில் தஞ்சை பெரிய கோயிலில் மாபெரும் தூய்மை இந்தியா திட்ட முகாம் நடைபெற்றது. பல்கலைக்கழக நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர் லட்சுமி பிரபா மற்றும் மாவட்ட இளைஞர் அலுவலர் திருநீலகண்டன் முன்னிலையில் மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் முகாமை தொடங்கி வைத்தார்.

முகாமில் குந்தவை நாச்சியார் மகளிர் கல்லூரி, பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, பூண்டி புஷ்பம் கல்லூரி, மருதுபாண்டியர் கல்லூரி, அன்னை வேளாங்கண்ணி கல்லூரி, இந்திய உணவுப் பதன தொழில்நுட்ப கழகம் சேர்ந்த 500 நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் பங்கேற்றனர். முன்னதாக அனைவரும் தூய்மை பாரதம் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். முகாமில் சுமார் 300 கிலோ பிளாஸ்டிக் குப்பைகள் சேகரிக்கப்பட்டு தஞ்சை மாநகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டது.

Related Stories:

More
>