தேர்தல் அதிகாரியின் காரை வழி மறித்து அத்துமீறிய அதிமுகவினர்; முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது கொலை மிரட்டல் வழக்குப்பதிவு

கரூர்: கரூரில் தேர்தல் அதிகாரியின் காரை வழி மறித்து அத்துமீறிய விவகாரம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்ட அதிமுகவினர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கரூர் மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவருக்கான மறைமுக தேர்தல் நேற்று தேர்தல் அதிகாரி மந்திராசலம் தலைமையில் தொடங்கியது.

ஆனால் தேர்தல் தொடங்கிய சிலமணி நேரங்களிலேயே ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனை கண்டித்து அதிமுக முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்ட அதிமுகவினர் தேர்தல் அதிகாரியின் காரை வழிமறித்து அத்துமீறலில் ஈடுபட்டனர்.

இது தொடர்பாக தான்தோன்றிமலை காவல் நிலையத்தில் தேர்தல் அதிகாரி மந்திராசலம் புகார் அளித்தார். அதன் பேரில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்ட அதிமுகவினர் மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories:

More
>