ஒட்டன்சத்திரத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம்  நகராட்சிக்குட்பட்ட திண்டுக்கல் சாலையில் ஆக்கிரமிப்பு கடைகளால்  போக்குவரத்து இடையூறு ஏற்பட்டதுடன், பாதசாரிகளும் அவதியடைந்தனர்.  இதுகுறித்து நகராட்சிக்கு புகார்கள் சென்றது. இதையடுத்து நேற்று ஆணையாளர் தேவிகா தலைமையில் நகராட்சி பணியாளர்கள், நெடுஞ்சாலை துறையினர், போக்குவரத்து போலீசார் இணைந்து திண்டுக்கல் சாலையில் வணிக வளாகங்கள், கடைகளுக்கு முன்பு அமைத்திருந்த பந்தல்கள், விளம்பர தட்டிகளை ஜேசிபி இயந்திரம் மூலம் அகற்றினர்.

இதில் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ராஜன், நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் பாபுராம், நகரமைப்பு ஆய்வாளர்  ரவிச்சந்திரன், சுகாதார ஆய்வாளர் வீரபாகு, உதவி பொறியாளர் ராஜன், சாலை ஆய்வாளர் ஆண்டவன், பாபு, மாசிலாமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Related Stories:

More
>