‘காண்ட்ராக்டரை காணவில்லை’ திண்டுக்கல்லில் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு

திண்டுக்கல்: திண்டுக்கல்-  நத்தம் சாலையில் நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி கடந்த 3 ஆண்டுகளாக நடந்து  வருகிறது. சாலை அகலப்படுத்தும் பணியின் போது காவிரி கூட்டுக்குடிநீர் பைப்  உடைப்பு ஏற்படுகிறது. மின்சார கம்பிகளை மாற்றியமைக்கும் போது அடிக்கடி  மின்தடை ஏற்படுகிறது. மேலும் சாலைகளும் குண்டும், குழியுமாக கிடப்பதால்  பொதுமக்கள், வாகனஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதை சரிசெய்ய  கோரி ஒப்பந்தகாரரிடம் பலமுறை தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என  கூறப்படுகிறது.

இதை கண்டிக்கும் விதமாக  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திண்டுக்கல் நகர் முழுவதும் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அதில், ‘குள்ளனம்பட்டி, நல்லாம்பட்டி பிரிவு, பொன்னகரம்  பகுதிகளில் மனித உயிர்களை காவு வாங்கும் திண்டுக்கல்- நத்தம் சாலையில்  காண்ட்ராக்டரை காணவில்லை, மாநகராட்சி நிர்வாகமே நத்தம் சாலையில் உள்ள தெரு  விளக்குகளை எரிய வை, குண்டும்- குழியுமான சாலையை சரிசெய்து பொதுமக்கள்  உயிர்களை பாதுகாத்திடு’ என குறிப்பிட்டிருந்தனர். இந்த போஸ்டரால் திண்டுக்கல்லில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  

Related Stories:

More
>