தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில் வரும் 25ஆம் தேதி முதல் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்; தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, வேலூர், தருமபுரி, ராணிப்பேட்டையில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சேலம், திருப்பத்தூர், திருவண்ணாமலை, மதுரை மாவட்டங்களிலும் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது.

தென் மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்கள், உல் மாவட்டங்களில் அநேக இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்காலில் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யும். தமிழகத்தில் நாளையும் கனமழை தொடரும். நாளை சேலம், மதுரை, ஈரோடு, கிருஷ்ணகிரி, வேலூர், புதுக்கோட்டையில் இடி, மின்னலுடன் கனமழை பெய்யக்கூடும். மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்கள், உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

அக்.25-ல் தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறையில் இடி, மின்னலுடன் மிக பலத்த மழை பெய்யும். தமிழ்நாட்டில் இதர மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அக்.26, 27-ல் மதுரை, சிவகங்கை, விருதுநகர், புதுக்கோட்டை, ராமநாதபுரத்தில் மிக பலத்த மழை பெய்யக்கூடும். நெல்லை, தூத்துக்குடி, குமரி, தென்காசி, ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்யக்கூடும். தமிழ்நாட்டில் இதர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓடியுடன் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

சென்னையில் அடுத்த 48 மணி நேரத்த்துக்கு ஒருசில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும். இன்றும் நாளையும் அரபிக்கடலில் தென் மேற்கு பகுதி, கேரள கடலோர பகுதிகளில் பலத்த சூறாவளி வீச வாய்ப்பு உள்ளது. அக்.26, 27-ல் மன்னார் வளைகுடா, தமிழ்நாட்டின் கடலோர பகுதிகள், வங்கக்கடலில் தென் மேற்கு பகுதியில் பலத்த சூறாவளி வீச வாய்ப்பு உள்ளது. மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த சூறாவளி வீச வாய்ப்புள்ளதால் மீனவர்களுக்கு 4 நாட்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Stories:

More
>