×

மீன் பிடிக்க சென்ற விசைபடகு மீது பனாமா நாட்டு கப்பல் மோதல்; இரண்டு மீனவர்கள் படுகாயம்

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலிலிருந்து மீன் பிடிக்க சென்ற விசைபடகு மீது பனாமா நாட்டு கப்பல் மோதியதில் இரண்டு மீனவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். கொட்டில்பாடு மீனவ கிராமத்தை சேர்ந்த ராஜாமணி என்பவருக்கு சொந்தமான விசைபடகில் மேற்கு வங்கத்தை சேர்ந்த இருவர் உட்பட 17 பேர் நேற்று மாலை ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்றனர். குளச்சலில் இருந்து 19 நாட்டிக்கல்லில் இருந்த போது அந்த வழியே வந்த பனாமா நாட்டை சேர்ந்த நேவிஸ் வீனஸ் என்ற சரக்கு கப்பல் மீனவர்களின் விசைபடகிர்மீது மோதியது.

படகு முற்றிலும் உடைந்த நிலையில் அதிலிருந்த சின்னதுரை,  அருள்ராஜ் ஆகியோர் கடலில் விழுந்தனர். தகவலறிந்து நிகழ்விடத்திற்கு வந்த கடலோர காவல்படை கடலில் தத்தளித்த சின்னதுரை,அருள்ராஜை மீட்டு திருவனந்தபுரம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

எஞ்சிய 15 மீனவர்களையும் சேதமடைந்த விசைப்படகையும் கடலோர காவல்படையினர் குளச்சல் மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டு வந்து சேர்த்தனர். விபத்து ஏற்படுத்திய சரக்கு கப்பல் மீது வழக்கு பதிவு செய்து சேதமடைந்த விசைபடகிற்கு உரிய இழப்பை பெற்று தர வேண்டுமென்று மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Panama , Panamanian ship collides with fishing boat; Two fishermen were injured
× RELATED நெல்லையில் இருந்து குமரிக்கு பரவியது வாழையை தாக்கும் பனாமா வாடல் நோய்