எண்ணூர் அனல்மின் நிலைய பணிக்காக கொற்றலை ஆற்றில் கொட்டப்பட்ட கட்டுமான பொருட்களை அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: எண்ணூர் அனல்மின் நிலைய பணிக்காக கொற்றலை ஆற்றில் கொட்டப்பட்ட கட்டுமான பொருட்களை அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீர்வழிப்பாதையில் தடை ஏற்படுத்தும் கட்டுமான பொருளை அப்புறப்படுத்தியது பற்றி அறிக்கை தரவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அனுமதித்த பாதையிலிருந்து விலகி கட்டுமான பொருட்கள் கொட்டப்படுவதாக காட்டுக்குப்பம் மீனவர் துரைசாமி மனு அளித்துள்ளார். எண்ணூர் அனல்மின் நிலையத்துக்கு நிலக்கரி கொண்டு செல்ல கன்வேயர் அமைக்கும் போது விதிமீறல் என வழக்கு தொடரப்பட்டுள்ளது.

Related Stories:

More
>