நவம்பர் 1ம் தேதி மழலையர், நர்சரி பள்ளிகள் திறக்கப்படாது: தமிழ்நாடு அரசு அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் நவம்பர் 1-ம் தேதி மழலையர், நர்சரி பள்ளிகள் திறக்கப்படாது என அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வருவதால் செப்டம்பர் 1-ம் தேதி முதல் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது. அரசின் வழிகாட்டுதலின்படி முறையாக நெறிமுறைகளை கடைபிடித்து பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. இதையடுத்து நவம்பர் 1-ம் தேதி முதல் 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளது.

இதற்காக பள்ளிகளை தயார்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் நவம்பர் 1-ம் தேதி மழலையர், நர்சரி பள்ளிகள் திறக்கப்படாது என அரசு அறிவித்துள்ளது. மழலையர், நர்சரி பள்ளிகளை தற்போதைக்கு திறக்கும் முடிவு இல்லை என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மழலையர், எல்கேஜி, யூகேஜிக்கு பள்ளிகளை திறப்பது பற்றி பின்னர் முடிவெடுக்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.

Related Stories: