நிலக்கரி ஏற்றி சென்ற லாரியின் மீது மினி லாரி மோதல்; மினி லாரியின் ஓட்டுநர் உயிரிழப்பு

கடலூர்: கடலூர் அருகே நிலக்கரி ஏற்றி சென்ற லாரியின் மீது மினி லாரி மோதிய விபத்தில் மினி லாரியின் ஓட்டுநர் உயிரிழந்துள்ளார். கடலூர் மாவட்டம் சிறுப்பாக்கம் சோதனை சாவடி அருகே நிலக்கரி ஏற்றி சென்ற லாரி மீது மினி லாரி மோதியதில் இரண்டு வாகனங்களும் தீப்பிடித்து எரிந்து கொண்டிக்கிறது. இதனால் தற்போது போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டம் விருதாச்சலத்திலிருந்து சேலத்திற்கு ஒரு லாரி நிலக்கரி ஏற்றிச்சென்றுள்ளது அப்போது சிறுப்பக்கம் சோதனை சாவடி அருகே இரவில் ஓட்டுநர் லாரியை நிறுத்திவிட்டு தூங்கி கொண்டிருந்த நிலையில் அதன் மீது விருதாச்சலத்திலிருந்து சேலம் சென்ற மற்றொரு மினி லாரி எதிர்பாராதவிதமாக மோதியது.

இதில் சம்பவ இடத்திலேயே மினி லாரி ஓட்டுநர் உயிரிழந்தார் மேலும் நிலக்கரி ஏற்றி சென்ற லாரி என்பதால் தீ மளமளவென பரவியதால் லாரி வெடித்து சிதறும் நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக விருத்தாசலம் சேலம் தேசிய நெடுஞ்சாலையில் தற்போது போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

தகவலறிந்து வந்த வேப்பூர் தீயணைப்பு படையினர் தற்போது தீயை அணைத்து வருகின்றனர் மேலும் படுகாயமடைந்த மற்றொரு லாரி ஓட்டுநர் அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறார். நிலக்கரி ஏற்றி சென்ற லாரி என்பதால் தீயை அணைப்பதற்கு தீயணைப்பு படையினர் தற்போது போராடி வருகின்றனர்.

Related Stories: