தொழிலதிபர் ராஜநாராயணன் வீட்டில் நடந்த லஞ்ச ஒழிப்பு சோதனையில் 450 ஏக்கர் நிலத்திற்கான ஆவணங்கள் சிக்கன

சென்னை: சென்னை கோடம்பாக்கத்தில் தொழிலதிபர் ராஜநாராயணன் வீட்டில் நேற்று லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். சோதனையில் ராஜநாராயணன் வீட்டிலிருந்து நிலம் வாங்கியது தொடர்பான முக்கிய ஆவணங்கள் சிக்கின. ஓராண்டுக்கு முன்பு சேலம் இளங்கோவனுக்கு ராஜநாராயணன் 450 ஏக்கர் நிலம் வாங்கி கொடுத்தது சோதனையில் அம்பலமாகியுள்ளது. லஞ்ச ஒழிப்பு போலீஸ் நடத்திய விசாரணையில் இளங்கோவனை நேரில் பார்த்ததில்லை என ராஜநாராயணன் தகவல் அளித்துள்ளார். இளங்கோவனின் நண்பரான பரிபூரணம் மூலம் தான் 450 ஏக்கர் நிலத்தை வாங்கி கொடுத்ததாக ராஜநாராயணன் வாக்குமூலம் அளித்துள்ளார்.

Related Stories:

More
>