திமுக, கூட்டணி கட்சிகள், பொதுமக்கள் சார்பில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் சாலை

திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் பேரூராட்சி 6வது வார்டு கங்கையம்மன் கோயில் தெரு, வாணியர் தெருவை இணைக்கும் பகுதியில் இதுவரை  சாலை வசதி  இல்லை. இதுதொடர்பாக பொதுமக்கள், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தனர். எவ்வித நடவடிக்கையும் இல்லை. மழை காலங்களில் இப்பகுதி சேறும், சகதியுமாக மாறிவிடும். இதையொட்டி, மக்கள் பெரும் அவதியடைகின்றனர். இந்நிலையில், மேற்கண்ட பகுதியில் புதிய சாலை அமைக்க திமுக கூட்டணி கட்சியினரும், பொதுமக்களும் முடிவு செய்தனர்.

இதையடுத்து, புதிய சாலை போடுவதற்கான  பணியின் மதிப்பீட்டு தொகை நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ. 10 லட்சம் என மதிப்பீடு செய்யப்பட்டது.  இதை தொடர்ந்து, திமுக மற்றும் கூட்டணி கட்சிகள்,  பொது மக்கள் சார்பில், ரூ.3.35 லட்சத்தை வங்கி வரையோலையாக திருக்கழுக்குன்றம் நகர திமுக செயலாளர் ஜி.டி.யுவராஜ்,  திருக்கழுக்குன்றம் பேரூராட்சி செயல் அலுவலர் கிருஷ்ணசாமியிடம் வழங்கினார்.

Related Stories:

More
>