ரயில் மோதி மாணவன் பலி

திருத்தணி: திருத்தணி அடுத்த நொச்சிலி கிராமத்தை சேர்ந்தவர் சித்தையா. இவரது மகன் லட்சுமிபதி(19), அரக்கோணத்தில் உள்ள தனியார் ஐடிஐயில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில், நேற்று வழக்கம்போல் ஐடிஐ  சென்று அரக்கோணத்தில் இருந்து திருத்தணிக்கு வந்த மின்சார ரயிலில் வீட்டிற்கு வந்தார். அப்போது ரயில் நிலையத்தில் இறங்கி பேருந்தில் வீட்டுக்கு செல்ல தண்டவாளத்தை கடந்தார். அப்போது சென்னையிலிருந்து திருப்பதி நோக்கி சென்ற கருடாத்ரி எக்ஸ்பிரஸ் மோதி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே  பரிதாபமாக உயிரிழந்தார்.

Related Stories:

More
>